வினா
மெய் இல்லை
வலி இல்லை
மாயம் என்பார்
பெருமை இல்லை
சிறுமை இல்லை
கடமை என்பார்
உணர்ச்சி இல்லை
உரிமை இல்லை
தர்மம் என்பார்
மெய் என்ன
பொய் என்ன
செய் என்பார்
உருவம் இல்லை
உலகம் இல்லை
உருபொருள் என்பார்
கேள்விகள் கேட்டிடின்
மனிதம் பேசிடின்
பாவி என்பார்
மூடன் என்பார்
கொல் என்பார்
கேள்விகள் கேட்டவர் கெட்டதில்லை !
மனிதம் போற்றியவர் மாண்டதில்லை !