இந்தியாவில் பெண்களின் உரிமைகள்
பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகள் :
- அரசானது எந்தவொரு இந்திய குடிமகன் அல்லது குடிமகளுக்கு எதிராக பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு பாராட்டக்கூடாது [ நிபந்தனை 15(1) ].
- எந்த விதமானச் சிறப்பு ஒதுக்கீட்டையும் பெண்களுக்குச் செய்து தர அரசிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேறு விதமாக கூறுவதானால், இந்த ஒதுக்கீடு, அரசு, பெண்களுக்கு உடன்பாடான பாகுபாட்டை வகுக்கச் செய்கிறது [ நிபந்தனை 15(3) ].
- எந்தவொரு குடிமகளும் பாலினத்தின் அடிப்படையில் அரசிற்கு கீழான எந்தவொரு வேலை வாய்ப்புக்கோ அலுவலுக்கோ எதிராகவோ தகுதியற்றவராகவோ பாரபட்சமாக நடத்தப்படக்கூடாது [ நிபந்தனை 16(2) ].
- ஆள் கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பு தடை செய்யப்பட்டுள்ளது [ நிபந்தனை 23(1) ]
- ஆணும் பெண்ணும் சமமாக வாழ்வாதாரத்துக்கு போதிய வருமானத்தை ஈட்டும் உரிமையை அரசு பாதுகாக்கும் [ நிபந்தனை 39(a) ]
- இந்திய ஆணும் பெண்ணும் ஒப்பான உழைப்பிற்கு இணையான ஊதியம் பெறுவதை அரசு பாதுகாக்கும்.[ நிபந்தனை 39(d) ].
- பெண் தொழிலாளர்களின் உடல் நலமும் அவர்களது வலிமையும் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா என்றும் அவர்கள் பொருளாதார தேவைகளால் தங்களது வலிமைக்கு மீறிய தொழில்களில் ஈடுபட உந்தப்படாமல் இருக்கிறார்களா என்று அரசு உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது [ நிபந்தனை 39(e) ]
- நேரிய மற்றும் மனிதத்தன்மை நிறைந்த வேலை சூழ்நிலை மற்றும் பேறுகால உதவியை பெறுவதற்கான ஒதுக்கீடுகளை அரசு செய்துதர வேண்டும் [ நிபந்தனை 42 ]
- பெண்களின் மரியாதையை இழிவுபடுத்தக்கூடிய செயல்களை கைவிடுவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையாக இருக்க வேண்டும் [ நிபந்தனை 51- A(e) ]
- ஒவ்வொரு பஞ்சாயத்திலும் நேரடி தேர்தலில் நிரம்பும் மொத்த எண்ணிக்கையிலான இடங்களில் மூன்றில் ஒரு பகுதியானது பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் [ நிபந்தனை 243-D(3) ]
- ஒவ்வொரு நிலையிலுள்ள பஞ்சாயத்துகளிலும் உள்ள மொத்த எண்ணிக்கையிலான தலைமை அலுவல்களில் மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் [ நிபந்தனை 243-D(4) ]
- ஒவ்வொரு நகராட்சியிலும் நேரடி தேர்தலில் நிரம்பும் மொத்த எண்ணிக்கையிலான இடங்களில் மூன்றில் ஒரு பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் [ நிபந்தனை 243-T(3) ]
- மாநில சட்டமன்றம் வழங்கும் முறையில் நகராட்சிகளில் உள்ள தலைமை அலுவல்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் [ நிபந்தனை 243-T (4) ]
No comments:
Post a Comment