எழுச்சித்தனல் கனன்றுகொண்டிருக்கையில்
விடுதலை காற்று வீசும்போது
முகத்தினில் விழும் ஞாயிறுஒளிகூட
நாளை விடியப்போகும் விடிவெள்ளியாய் தோன்றுகிறது
எண்ணும் எழுத்தும் கற்றுரிந்தும்
எண்ணிய நற்செயல்களை புரிந்திடமுடியாமல்
ஏங்கி ஏங்கி மீழமுடியாமல்
மூழ்கிய நாட்களை எண்ணி முடியாது
நமது விரல்கள் பத்தும்
வீறுசெயல் புரிந்திடும் நாட்கள்
வெகுதொலைவினில் இல்லை; ஊர்கள் பத்தும் இணையட்டும்
வெற்றி நம்மை ஒய்வு கொள்ள செய்யாமல் இருக்கட்டும்!