Saturday, May 6, 2017

Vetri nammai oyvu kolla seiyaamal irukatum


எழுச்சித்தனல் கனன்றுகொண்டிருக்கையில் 

விடுதலை காற்று வீசும்போது 

முகத்தினில் விழும் ஞாயிறுஒளிகூட 

நாளை விடியப்போகும் விடிவெள்ளியாய்  தோன்றுகிறது 


எண்ணும்  எழுத்தும்  கற்றுரிந்தும் 

எண்ணிய நற்செயல்களை புரிந்திடமுடியாமல் 

ஏங்கி ஏங்கி மீழமுடியாமல் 

மூழ்கிய நாட்களை எண்ணி முடியாது



நமது விரல்கள் பத்தும் 

வீறுசெயல் புரிந்திடும் நாட்கள் 

வெகுதொலைவினில் இல்லை; ஊர்கள் பத்தும் இணையட்டும் 

வெற்றி நம்மை ஒய்வு கொள்ள செய்யாமல் இருக்கட்டும்!

                                                             

No comments:

Post a Comment