மனசித்தி பெற்றோமில்லை
அண்டிப்பிழைக்கும் அன்னதானக்
கோமகனும் இன்புறுவானில்லை
ஆழியிலே உண்டோ
நுரைக்குமிழியிலே உண்டோ
வேள்வியிலே உண்டோ
கேள்வியிலே உண்டோ
சக்கரத்தில் உண்டோ
நின்று சுழலும் அச்சிலே உண்டோ
வான் நகையில் உண்டோ
மின்னும் மின் மினியிலே உண்டோ
கண்ணில் உண்டோ
வீழும் கண்ணீர்த் துளியிலே உண்டோ
ஆராய்ந்துக் களைப்புற்று
கண்விழித்து பார்த்தனன்
நெற்றியின் உள்ளே நின்றொடும்
எம் மனக் குதிரை