சாதிக்கோர் வண்ணம் பூசுவதற்கு பதிலாக
சத்தியக் கருவண்ணம் பூசிக்கொள்வேன்
உடல் முழுவதும் மட்டுமல்ல
உயிர் முழுவதும் ! உயிர் முழுவதும் !
மதத்திற்கோர் பாடல் பாடுவதற்கு பதிலாக
மனித இனத்திற்கோர் பாடல் பாடிடுவேன்
ஊரார் கேட்கும் மட்டுமல்ல
உலகம் கேட்கும் மட்டும் ! உலகம் கேட்கும் மட்டும் !
சொத்துக்களை சேர்ப்பதற்கு பதிலாக
சொந்தங்களை சேர்த்துக்கொள்வேன்
மகிழ்ச்சி உள்ளவரை அல்ல
மூச்சுக்காற்று உள்ளவரை ! மூச்சுக்காற்று உள்ளவரை !
மானமிழந்து வாழ்வதற்கு பதிலாக
மானத்தோடு மடிந்திடுவேன்
குழிப்பறிக்கும் துரோகியின் கையாலல்ல
குத்திக்கொல்லும் எதிரியின் கையால்!
அணைகளைக்கட்டி அடித்துக்கொள்வதற்கு பதிலாக
ஆறுகளை இணைத்து இன்புறுவேன்
நாட்டில் ஓடுவனவற்றை மட்டுமல்ல
நானிலத்தில் ஓடுவனவற்றையும் !
- அலன் கிஃப்ட்சன்
No comments:
Post a Comment