Thursday, October 20, 2016

Dark and bark


In a forest, there was Tom
His lovely pastime was to roam
Around in the woods, at the dark
The dark didn't let it's dogs bark
To him, the dark was nice
In the woods amid the twilight
A candle light is what Tom saw
Following the light, went into the dark
The Dark was fascinating so as the bark
A different bark possesing a lark
The bark flickered to light.
Tom flapped, jerked by the bark
Bark transformed into a beautiful girl
With a candle light, meticulously alluring
Realizing her coat was the bark,
Tom cursed his taunting eyes
'Oh my!' murmured his mouth






Tuesday, October 18, 2016

Democratic son


                                         ஜனநாயக புதல்வன்


சாதியால் வீடுகட்டி
மதத்தால் மாடிக்கட்டி
மாடியின்மீது நின்று
"பிரிவினை ஒழிந்தது"
என்று கத்தினான்
ஜனநாயகப் புதல்வன்

                                                                          - அலன் 

Sunday, October 9, 2016

My thoughts


                                                       My thoughts


The prism of life refracts multitude of colours. Living it is all about perception.

Follow your own truth. Stand by them.

Do whatever you like
Success is just an option

To err is human, ego is one of them

I am a racist, I belong to human race
I am an atheist and my religion is humanity

Betrayal is like a dream, a bad dream 
You woke up when you got hurt

Laughter is a drifter, a prankster
Who pranks your heart
And shifts your mind
From your daily worries

Untie the correct knot to eliminate the 'not' from cannot.

Do it, like you would die if you don't.

"Discover", discover yourself before even thinking about it

A freedom fighter is a terrorist, until freedom is achieved.

Think twice, frustations may rise
Stand nice, your mind is your vice

Disappointment is surf
Confidence is your board

Level yourself high
Don't lose yourself when high

Travel like blood in your veins
Trifle like roofs under rain

Render yout hearts to the needy
Plunder their blessings till they say you are greedy

One mistake can change everything
One word can ruin relationships
One action can create revolution

If a person loves you for a reason, don't love them back.. They may leave you if the reason becomes invalid.

People never fail in loving. They fail in the way of expressing it.

An artist must be the first person to clean a dirt and to admire a beauty.

Everyone sees the stage, but often forgets to see the work under.

Today's act is tommorow's fate


                                                                                                         - Alan Giftson



You


                                                                      நீ


புனைந்து தீராக் கவிதை நீ

விடியா உலகின் தேடல் நீ

மண்துகள் போற்றும் மழைத்துளி நீ

கண்ணிமைக்கும் நேர ஓய்வு நீ

ஆழத்தெளிந்த நீரின் ஓட்டம் நீ

தாளம் அறியா ராகம் நீ

வானம் தொடா காற்று நீ

நேற்று முடிந்த இன்று நீ

வெளிச்சம் நாடும் இருள் நீ

மொழி கற்கும் எழுத்து நீ


                                                                                   - அலன் 

Saturday, October 8, 2016

Pen

                                                         எழுதுகோல்


உன்னுதிரத்தை உயிராக்கி உண்மையாக்கி 

   உம்மறுமைக்குள் மாற்றத்தை உருவாக்கி 

உன்னிழப்பைப் பிறப்பாக்கி எழுத்தாக்கி

   ஊன்றியசைந்து வெள்ளையனுக்கு வலிகொடுத்து

சொல்லுக்கு பொருளாகி உயிருக்கு மெய்யாகி

   ஒளிதரும் சிந்தைக்கு வழியாகி

உட்புகும் கருத்துக்கு ஊடகமாகி

   ஊடகங்களின் உறுப்புக்குத் துருப்பாய் நிற்கும் கோலே


                                                                                        - அலன்


Friday, October 7, 2016

Will you become meaningless? oh my life!

                                                       அர்த்தமற்றே போவாயோ ?


எனதருமை  வாழ்க்கையே

அர்த்தமற்றே போவாயோ ?

ஈதலே இன்பமோ ?

ஆதலின் சாதலே,

இன்பமாய் எண்ணியே ,

உயிரை ஈவேனே ...

ஐய்யம் கலைந்தே ...

ஊருக்கும் உலகுக்குமே !!



                                                                             - அலன்



Wednesday, October 5, 2016

Art is politics


 
        கலை அரசியலா? என்ற கேள்விக்கே இடமில்லை. உற்றுநோக்கின் கலை ஓர் அரசியல், அரசியல் ஓரு கலை என்பது விளங்கும்.  கலை என்பது தனியொருவரின் அகவெளிப்பாடாகும். அத்தனியொருவரின் அகவெளிப்பாடு சமூகம் முழுமையாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அதுவே அச்சமூகத்தின் அகவெளிப்பாடாக மாறுகிறது. அதேசமயம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விதிமுறை எப்பொழுதும் சரியான, மாற்றக்கூடாத, மாற்றவியலாத விதிமுறையல்ல. சரியான ஒருசெயல் பிரபலமாகாமலும், பிரபலமான ஒருசெயல் தவறாகவும் இருக்கலாம். ஒரு நல்ல கலைஞன் தவறைச்சுட்டிக் காட்டுகின்ற முதல் விரலாகவும், சரியானவற்றை முதலில் பார்க்கின்றக் கழுகின் கண்ணாகவும் இருக்க வேண்டும்.
     

         எவன் ஒருவன் சமூகத்தின் உணர்வை, அதன் வலியை, அதன் விடுதலையை, அதன் தேவையை புரிந்து கொள்கிறானோ அவன் சிறந்த அரசியல்வாதியாகிறான். அரசியல் செய்ய ஆளுமை மட்டும் போதாது, ஆழ்ந்த அன்பும் வேண்டும். அத்தகைய ஆளுமையையும் அன்பையும் அள்ளிக்கொடுக்கும் ஆலையாக கலை விளங்குகிறது.  ஒரு தலைவன் தன் மக்களின் மீது வைத்திருக்கும் பரிவை மக்களுக்கு உணர்த்தக் கலை உதவுகிறது. அதேவேளையில் மக்களின் கோபத்தைத் தலைவனுக்கு புரியவைக்கவும் கலை பயன்படுகிறது.


          கலையானது  ஒருநாட்டின்  வரலாற்றை, அந்நாடு கொண்டிருந்த அரசியலை வர்ணிக்கிறது. அது ஒருகாலக்கட்டத்தின் பெருமையை பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துச்செல்கிறது. எந்த ஒரு சமூகமும் அதன் சொந்த வரலாற்றை அறிந்திராமல் நல்வாழ்வு பெறவியலாது. வரலாறு மறந்த சமூகம் உலகத்தால் மறக்கப்படும்.


           சிறந்த கலையானது திரும்ப திரும்ப ஒருவரை ரசிக்கவைப்பது மட்டுமன்று, ஒவ்வொரு முறையும் ஒருவரை சிந்திக்க வைப்பதே ஆகும்.
அறிவெனும் பெட்டகத்திலே ஒவ்வொரு முறை ரசிக்கப்படும்போதும் புதுப்புதுக் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஆற்றல் கலைக்கு உண்டு. அவ்வாறு ரசிகரின் சிந்தனையை தூண்டுவதன் மூலம் பல வகையில் அவரை ஆக்கப்பூர்வமாக மேம்படுத்துவது கலையாகும்.
     

        அரசியல் ஒரு கலை, நுண்கலை என்றும் தெளிவாகச்சொல்லலாம். என்ன தான் ஒரு தலைவன் நல்லத் திட்டங்களை வகுத்தாலும் சரியான முறையில் அது மக்களைச் சென்றடையவில்லையானால் அத்திட்டங்களை வகுத்ததற்கே  அர்த்தமல்லாது  போய்விடும். வரலாற்றை நாம் ஆய்வோமானால் கலையை பயன்படுத்தத்தெரியாத அரசுகள் பல வீழ்ந்ததும், பல அரசுகள் நற்கலையால் எழுச்சியுற்றதும் புலப்படும்.



                                                                                             - அலன் கிஃப்ட்சன்