சலுகையும் சமுதாயமும்
இந்திய சமுதாயம் என்பது பல்வேறு விதமான சலுகைகளை பெற்றுள்ள சமுதாயம், இவ்வளவு சலுகைகள் இருந்தாலும் சமத்துவம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. காரணம், இச்சலுகைகள் எதற்காக என்று அச்சலுகையை பெறுபவர்க்கே தெரியாததால் மட்டுமே. மேலும் மக்கள் பலவேளைகளில் சலுகைக்கும் உரிமைக்கும் இடையேயான வித்தியாசத்தை அறியாமல் குழம்பிக் கொள்கிறார்கள்.
ஒருவன் சமுதாயத்திற்கு தொண்டாற்றுவதால் அச்சமுதாயம் அவனை ஊக்குவிக்கும் முறையில் கொடுப்பது, சலுகை. விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் ஊக்கங்கள் இந்த வகையில் சேரும்.
ஒரு சமுதாயத்தில் இருக்கும் ஒரு பகுதியினர் தங்களின் அன்றாட தேவைகளையும், அடிப்படை வசதிகளையும் பெற முடியாமல் போகையில் அவர்களுக்கு அச்சமுதாயம் கொடுக்கும் ஊக்கம், சலுகை ஆகாது. அது அம்மக்கள் தங்களின் அடிப்படை உரிமையை பெற்றுக்கொள்வதற்குதவும் செயல்பாடாகும் .
இந்தியாவை பொறுத்தவரை சமுதாயத்திற்கு தொண்டாற்றாதவர் சலுகைகளை பெறுகிறார், ஏற்கனவே உரிமையை பெற்றுக்கொண்டவர் பிறரின் உரிமையை பறிக்கிறார். இவ்விரு செயல்களும் அடுத்தவரின் குழந்தையை தன் குழந்தை என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மட்டமான செயல்களாகும். இவ்விரு தரப்பினரும் தம்மைப்போன்றதொரு சகமனிதரின் சலுகையையே, உரிமையையே பறித்துக்கொள்கின்றனர். நம்மை சேர்ந்தவர்களே நம்மை ஏமாற்றும் பொழுது நமக்கு எதிராய் நிற்பவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என என்ன நிச்சயம்?
- Alan Giftson
No comments:
Post a Comment